Our services

Wednesday, February 24, 2010

உங்களுக்கு தெரியுமா - நடக்கின்ற சம்பவம்


 

தினமும் ஏராளமான ஆடுகளும் , மாடுகளும் ( பசு மாடுகளும் / எருமை மாடுகளும்) இந்தியாவின் பல கொலை களங்களில் வெட்டப்பட்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு  ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன - பணத்திற்காக.

 

ஆம்  !! ஒரு சிறு புறாவிற்க்காக   தன் உடலையே அறுத்து கொடுத்த மா மன்னன் சிபி ஆட்சி புரிந்த பாரத புண்ணிய பூமியில்  தான்  "மிருக வதை" என்னும் கொடிய பாவம் தலை விரித்து ஆடுகின்றது.

 

அனைத்து  ஜீவராசிகளும் இறைவனின் குழந்தைகளே!!   இறைவன் கருணையே உருவானவன்..

  • தன்  குழந்தைகளை பலியாக கேட்கும் தாய், தந்தை இருக்க முடியுமா இவ்வுலகில் ?
  • தன் குழந்தைகளின் ரத்தத்தை  எந்த தாய் தான் பருகுவாள்?
  • இறைவன் தான் அதை ஏற்பானா?

 

 

தன்னையே தாக்கும் அந்த வினை

                                             

உயிர் பிரிவதற்கு முன் அந்த நிராதரவான, வாய் விட்டு அழக்கூட  முடியாத அந்த ஜீவன் துடிதுடிக்கும் கொடிய அனுபவத்தை நினைத்து பார்க்கக்கூட சக்தி இல்லை.

உங்களுக்கு தெரியுமா - நடக்கின்ற சம்பவம்


 
பசுக்களையும் , காளை மாடுகளையும் வதை செய்யும் முறை என்னவென்று பல பேருக்கு தெரியாது. இப்போதாவது தெரிந்து கொள்வது அவசியம் . அவற்றின் தோல் பதபடுவதற்காக ஆவி பறக்கும் கொத்தி நீரில் , உயிருடன் அவற்றை போட்டு ,  உயிர் இருக்கையிலேயே அவற்றின் தோல் உரிக்கப்படுகின்றது

 

இதனை  எழுத நான் முதலில் விரும்ப வில்லை. ஆயினும் இதை தெரிந்து கொண்டால் சில மனிதர்களாவது மனம் மாறுவார்களே என்ற ஆதங்கத்தில் தான் இதனை நான் குறிப்பிட்டு உள்ளேன்.

இவ்விதம் சேர்க்கும் பணம் நமக்கு துணை வருமா ? தற்காலத்தில் மருத்துவ சிகிச்சையில் அறுவை சிகிச்சை மூலம் பல முக்கியமான உறுப்புக்களை வெட்டி எடுத்து அகற்றுகின்றார்களே! அதற்காக பல லட்சங்கள் பணம் வாங்குகின்றார்களே  மருத்துவ மனைகளில் .. அது ஏன் என்று எவரேனும்  சிந்தித்து பார்த்தது உண்டா?

 

"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் - ஆதலால் பாவத்தை செய்யாதீர்கள் " என ஆன்றோர்களும் , சான்றோர்களும் மீண்டும் , மீண்டும் வலியுறுத்தி வருகின்றார்களே அது ஏன்? ஒரு  சமயம் , புஜ்ஜியஸ்ரீ சின்மயானந்த மகராஜ் அவர்கள் தர்மத்தை பற்றி விளக்கும் போது,
 "DHARMA IS THE LOGICAL SYSTEM OF LAW"

என்று அருளினார்கள்

 

 

அதாவது நாம் எதை செய்கிறோமோ அது தான் நமக்கு திரும்பி வரும். இது தான் "தர்மம்" என்னும் சட்டத்தின் விதி .

 

மனித  பிறவியின் உண்மை தத்துவமும் இதுவே ?

பாவத்தை செய்து பணத்தை சம்பாதிபதனால்   என்ன பயன்?


அன்பே  தெய்வம் !!!.

நல்லன வாழ்வளிக்கும் !!!

தீவினை தீயென சுடும் !!!

இந்த தர்ம நெறியை நினைத்தாவது மனம் மாறுவானா மனிதன்?

மிருக  பலியை  கைவிடுவானா தனது நன்மைக்காகவே ? 

ஏக்கத்துடன்,

உங்கள் ஏ.எம்.ஆர்  (குமுதம் ஜோதிடம் இதழ் )


 

---------- Forwarded message ----------
From: Meenakshi Sundaram <asmsundaram75@rediffmail.com>
Date: 24 February 2010 13:39
Subject: irakkamilla manidan sayal
To: karthikeyan.jayapal@googlemail.com, vallalargroups@gmail.com
Cc: sundaram@artlite.in


Dear Karthi.,

pl. find the Scanned copy article about way people kill Cow and Buffalo for there Skin and Flesh.

Source  : Kumudam Jothidam issue
issue     : 25.12.09

pl. publish the same in our Groups

anbudan
Senthil

--




Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

No comments:

Poosam Calendar